அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை இடைநிறுத்தப்படுகிறது
அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்த பணிகளுக்காக ஜனவரி 5ம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 5ம் திகதியிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் மற்றும் அனுராதபுரத்திலிருந்து கோட்டை வரை மட்டுமே புகையிரத சேவைகள் இடம்பெறும்.
குறித்த காலப்பகுதியினுள் அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரை பயணிகளின் வசதிக்காக பேருந்துசேவை வழங்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு காங்கேசன்துறையில் இருந்து வவுனியா வரை ஐந்து மாத காலப்பகுதிக்குள் இயக்கப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.