அர்ச்சுனா எம்.பி சற்றுமுன் கைது
அநுராதபுர பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு.
கடந்த வாரம் அநுராதபுர பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தபோது அர்ச்சுனா என்பதற்கு பதிலாக சுலோச்சனா என குற்றபத்திரிகையில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன்பின் சுலோச்சனாவை கைதுசெய்யுமாறு தனது முகநூலில் அர்ச்சுனா எம்.பி பதிவிட்டிருந்த நிலையில் சற்றுமுன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.