எதிர்வரும் திங்கட்கிழமை (10.10.2022) வங்கிகளுக்கு விடுமுறை
எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது 10ஆம் திகதி (10.10.2022) சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் அக்டோபர் 9ஆம் கொண்டாடப்படுகிறது. குறித்த தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. இதுவொரு பொது, வங்கி மற்றும் வணிக விடுமுறை தினம்.
இதனை அடுத்தே வேலை நாளான அக்டோபர் 10ம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.