எமனாக மாறிய கனடா விசா, யாழில் ஒருவர் தற்கொலை!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு கனடா விசா கிடைத்த போதிலும், கனடாவிற்கு செல்ல விரும்பாத காரணத்தால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முந்தினம் (11-03-2024) இடம்பெற்றுள்ளது. அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் எனும் இளைஞனே உயிரிழந்தார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த நபரின் சகோதரி கனடாவில் வசித்து வரும் நிலையில் சுஜீவனுக்கும், அவரது தாயாருக்கும் கனடா விசிட்டர் விசாவிற்கு விண்ணப்பித்த நிலையில் கிடைத்திருந்தது.
எனினும் சுஜீவன் கனடா செல்ல விருப்பாத நிலையில் தனது சக்கர நாற்காலியை கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துகொண்டார்.



