சனத் நிஷாந்தவின் ஆவியை சொர்க்கத்திற்கு அனுப்ப அனுமதி!
நீதிமன்றத்தை அவமதித்த முன்னாள் அமைச்சர் சனத் நிஷாந்தவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்குகள் மீளப்பெற மேன்முறையீட்டு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்து, எதிராளியான சனத் நிஷாந்த உயிரிழந்தமையால், இந்த வழக்குகளை வாபஸ் பெற அனுமதி கோரினர்.
இக்கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் மனுக்களை வாபஸ் பெற அனுமதியளித்தது.
இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் பிரியலால் சிறிசேன மற்றும் விஜித குமார ஆகிய இரு சட்டத்தரணிகளால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2022 ஓகஸ்ட் மாதம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, செயற்பாட்டாளர்களுக்கு பிணை வழங்குவதற்கு நீதவான்கள் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் சனத் நிஷாந்த அறிக்கையொன்றை விடுத்து நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.