தாக்குதல் தொடர்பில் நம்ப தகுந்த தகவல் – பொலிஸ் திணைக்களம்
சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நம்பத்தகுந்த தாக்குதல் தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவுகள் இணைந்து, எவ்வித அச்சுறுத்தலுக்கும் எதிராக முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாகவும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், ஏதேனும் அவசரநிலை அல்லது சந்தேகத்திற்குரிய தகவல்கள் இருப்பின், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ‘1997’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்தைத் தொடர்புகொண்டு உடனடியாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.