மட்டக்களப்பில் குடும்ப சண்டை, மனைவி பலி கணவன் தப்பியோட்டம்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்கு உட்பட்ட ஆரையம்பதியில் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவமானது நேற்று வெள்ளிக்கிழமை (07.10.2022) இரவு 8 மணியளவில் இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரையம்பதி மாவிலந்துறையை சேர்ந்த 60 வயது உடைய 7 பிள்ளைகளின் தாயாரான நவரெத்திணம் சோதிமலர் என்பவரே உயிரிழந்துள்ளார்.
கணவன், மனைவியை சண்டையினால் கடந்த ஒரு மாதகாலமாக பிரிந்திருந்த நிலையில் கணவரை தேடி மனைவி சென்று சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மனைவியை அடித்துகொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடியுள்ளரென பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.