மருமகளை துஷ்பிரயோகம் செய்த மாமன் கைது
நுவரெலியா, நோட்டன் பிரிட்ஜ் 04 ஆம் தூண் பகுதியில் 13 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் மாமனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் முன்னர் 9 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடி மாவனெல்லை பிரதேசத்தில் தலைமறைவாக சுமார் 10 ஆண்டுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தலைமறைவான நபரை பொலிசார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய போது 05 மாத விளக்கமறியலில் பின் கடும் பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், சந்தேகநபர் நேற்று காலை பொலிஸில் கையொப்பமிட வந்துள்ளார்.
இதன்பின், சந்தேகநபரின் பிணையில் கையொப்பமிட்ட பின், தனது சகோதரியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கே சகோதரிய்ன் மகளை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு அந்த பகுதியில் இருந்து தப்பி சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் செய்த முறைப்பாட்டை அடுத்து, பொலிசாரால் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டது. இதன் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்புணர்வுக்கு உள்ளான பாடசாலை மாணவி டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 29 வயதான நோட்டன் பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.