மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 48 ஆண்டுகள் சிறை

(LBC தமிழ்) தனது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து குழந்தையை பெற்றெடுக்க வற்புறுத்திய நபருக்கு 48 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறித்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான குற்றவாளி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 500,000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 13 வயது இருக்கும் போது குழந்தையின் தாயார் தொழில் நிமித்தம் குவைத்துக்கு சென்றுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த சிறுமி தனது தந்தை மற்றும் அவரது இரு சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த காலப்பகுதியில் குறித்த நபர் தனது மகளை பலமுறை கற்பழித்துள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



