FIFA கால்பந்து உலக கிண்ண கால்பந்து தொடர், முதல் போட்டியில் பிரேஸில் வெற்றி

கட்டார் FIFA கால்பந்து உலக கிண்ண தொடரின், குழுநிலை போட்டியில் பிரேஸில் அணி வெற்றி பெற்றுள்ளது.

குழு G பிரிவில் இலங்கை நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில், பிரேஸில் அணியும் செர்பியா அணியும் மோதின.

லுசைல் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், பிரேஸில் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

இதில் பிரேஸில் அணி சார்பில், ரிச்சர்லிஸன் 62ஆவது மற்றும் 73ஆவது நிமிடங்களில் அணிக்காக இரண்டு கோல்களை அடித்துக் கொடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் பிரேஸில் அணி, 3 புள்ளிகளுடன் குழு G பிரிவில் முதல் இடத்தில் உள்ளது.

கடந்த 1934ம் ஆண்டு முதல் பிரேஸில் அணி, உலக கிண்ண தொடரில் தனது முதல் போட்டியில் வெற்றிபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.