யாழ் மாநகர முன்னாள் முதல்வர் கைது
யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் முதல்வர் ஆனோல்ட் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
மாட்டின் வீதியில் உள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் வைத்து ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் வாக்குமூலம் பெறுவதற்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்ட நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னிணைப்பு
யாழ்ப்பாண முன்னாள் மாநகர முதல்வர் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் ஜுலை 17ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.