யாழில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக மோசடி – மூவர் கைது

வெளிநாட்டுக்கு வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்வதாக கூறி, 61 இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு இளைஞனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி, அவரிடமிருந்து பணத்தை பெற்றுக் கொண்ட பிறகும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார், பண மோசடியில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள், நேற்றைய தினம் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மன்றம் மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.