யாழில் புலனாய்வு பிரிவு என கூறி நகைக்கடையில் பணம் கொள்ளை

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள நகைக் கடையில் நேற்று மதியம் மூவரடங்கிய குழு, 30 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றுள்ளது.
இவர்கள் தங்களை பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தி, கடைக்குள் நுழைந்து சோதனை நடத்தப்போவதாக கூறியுள்ளனர். பின்னர், கடையில் இருந்தவர்களை அச்சுறுத்தி பணத்தை பறித்துச் சென்றனர்.
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் பொலிஸார் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் குற்றவாளிகளை அடையாளம் காண மற்றும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்களை பொலிஸர் என அறிமுகப்படுத்தும் ஆட்களை உறுதிப்படுத்தாமல் உள்ளே அனுமதிக்க வேண்டாம். அனைத்து சந்தேகமான செயல்களை உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.