யாழ் புங்குடுதீவில் மனித எலும்புகூடு எச்சங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தில் சிவன் கோவில் புனரமைப்பு பணிகளின் போது, நிலத்தினை அகழ்வு செய்த போது எலும்புக்கூட்டின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு வைத்தியசாலைக்கு நெருக்கமான கடற்கரை ஓரத்திலேயே இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டது. அது மிக பழையதாக தோன்றுவதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
எனினும், 1985ம் ஆண்டில் இடம்பெற்ற குமுதினி படகு படுகொலையின் போது படுகாயமடைந்த ஒருவர் புங்குடுதீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற போது உயிரிழந்திருந்தார்.
அவ்வாறு உயிரிழந்தவரின் சடலமும் வைத்தியசாலைக்கு அருகாக உள்ள கடற்கரையோரத்தில் புதைக்கப்பட்டதாக உறவினர்கள் தரப்பில் கூறப்பட்டதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மீட்கப்பட்ட எலும்புக்கூட்டின் எச்சம் குமுதினி படுகொலை சம்பவ காலப்பகுதிக்கு உரியதா என்பது ஆய்வின் பின்னரே உறுதியாகும்.