ரணிலின் மூலம் தீர்வைப் பெற்றுத் தருவேன் ஆதரவு தாருங்கள் – அமைச்சர் டக்ளஸ்

கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிலைப்பாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல. ஆனால் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான விருப்பம் தற்போது அவரிடம் காணப்படுகிறது.

அது மட்டுமல்லாது தற்போதைய காலச்சூழலில் நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்றக் கூடிய தலைமைத்துவ ஆளுமையும் அவரிடம் உள்ளது என அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் பல்வேறு அமைப்புகள் மற்றும் துறைசார் நடைபெற்ற மக்களுடனான கலந்துரை யாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போது நாட்டின் ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரமசிங்க போட்டியிட உள்ளார். அவரே மீண்டும் ஜனாதிபதியாக வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. அதற்கும் பல காரணங்கள் உண்டு.

இதேநேரம் அரசியல் ரீதியில் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கான தீர்வினை முன்வைக்க மாட்டார், அவரை எவ்வாறு நம்புவது என சிலர் சிந்திக்கின்றனர். அதனால் தான் நான் கூறுகின்றேன் ரணிலை நம்பாவிட்டால் என்னை நம்புங்கள, நான் செய்விப்பேன் என்று. இந்நேரம் மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினையாக கொண்டு செல்லும் அரசியல்வாதியாக நான் ஒருபோதும் இருக்கப் போவதில்லை. இருந்ததும் கிடையாது.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இதேவேளை பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து முற்றாக அழிக்கலாம் எனஒ பலர் நம்பியிருக்கவில்லை. ஆனால் நான் நம்பியிருந்தேன். அது நடந்து. நாடும் அமைதி நிலைக்கு வந்துவிட்டது.

அது போன்றுதான் 13 ஆவது அரசமைப்பைத் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியெனவும் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்திருந்தேன். அதை அன்று பலர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இன்று அது கிடைத்தாலே போதும் என்று அவர்களே முணுமணுக்கத் தொடங்கியுள்ளனர்.

ஆகவேதான் நான் மக்களுக்கு ஒன்றை கூறுகிறேன். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகளால் தமிழ் மக்களின் பலத்தை காட்டுங்கள். மக்களுக்கான தீர்வினை நான் பெற்றுத் தருவேன். – என அவர் மேலும் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.