தேர்தலில் தோற்று விடுவேன் – நாமல் ஊகம்
ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெறுவது உறுதியில்லை என்று நாமல் ராஜபக்ச தன்னிடம் தெரிவித்ததாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மூன்று முக்கிய வேட்பாளர்களும் இன்னும் தங்கள் கொள்கை அறிக்கையை வெளியிடவில்லை. எனவே, கொள்கைப் பிரகடனங்கள் முன்வைக்கப்பட்ட பின்னர், தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுப்பதாக நாங்கள் தீர்மானித்துள்ளோம்” எனவும் எம்,ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து பல உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
எவ்வாறாயினும், எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது குறித்து வேட்பாளர்கள் தங்கள் கொள்கை அறிக்கையை வெளியிட்ட பிறகு முடிவு செய்யப்படும்.
இலங்கை பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட அதேவேளை, மூன்று முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களுடன் ஏற்கனவே கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எனினும் நாமல் ராஜபக்ச மட்டும் சிங்கள பெரும்பான்மை வாக்குகளை மட்டும் நம்பியிருப்பதாகவும் அவரது உரையாடலில் தெரியவந்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.