யாழ்ப்பாண சிறையில் பெண் கைதிக்கு துன்புறுத்தல்

யாழ் சிறையில் உள்ள பெண் கைதி ஒருவர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கைதியை உறவினர்கள் பார்வையிடுவதற்கு சென்றபோது சிறை காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாக சொல்லி அழுததாக உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.