யாழ் போதனாவில் பெண்கள் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த ஊழியர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த 45வயது மதிக்கத்தக்க ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை நையப்புடைக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ் போதனா வைத்தியசாலை சிற்றூண்டிச்சாலைக்கு சற்றுத்தள்ளி வைத்தியசாலை சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் நபர் ஒருவர் மறைந்திருந்து பெண்கள் குளிப்பதை தனது கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டிருந்தார்.
இதன்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக அந்த வழியே வந்த வந்த இளைஞர் ஒருவர் இதனை அவதானித்துள்ளார்.
வீடியோ பதிவு செய்துகொண்டிருந்த அந்த ஊழியரிடம் இருந்து தொலைபேசியை பறித்து பார்வையிட்ட போது அந்த தொலைபேசியில் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது.
தொலைபேசியை வைத்தியசாலை காவலாளிகளிடம் கையளிப்பதற்காக அந்த இளைஞர் கொண்டு சென்றுள்ளார். இதன்போது வீடியோ பதிவு செய்த நபர் அந்த இளைஞனிடம் கெஞ்சியபடி செல்ல அந்த இளைஞர் அந்த நபரை கண்ணத்தில் தாக்கிய படி சென்றார்.
பின் 24ம் விடுதிக்கு அருகில் உள்ள வைத்தியசாலை காவாலாளிகளிடம் தொலைபேசி கையளிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலை காவாலாளிகள் தொலைபேசியுடன் அந்த சுத்திகரிப்பு ஊழியரை போதனா வைத்தியசாலை பணிப்பாளரிடம் அழைத்து சென்றனர்.