வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். நபர் ஒருவர் தற்கொலை

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த நபர் யாழ்ப்பாணம் – சாவக்கச்சேரி பகுதியை சேர்ந்த 37 வயதுடையவரென தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், இருவர் தற்கொலைக்கு முயற்சித்தி இருந்தனர். இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், தீவிர சிகிச்சை பெற்று வந்த நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.