யாழில் நகை திருடனும், திருட்டு நகையை வாங்கியவரும் கைது
யாழ்ப்பாணத்தில், திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரும் , திருடிய பொருட்களை வாங்கியவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மீசாலை பகுதியில் வயோதிப பெண்மணி ஒருவர் தனியாக வசித்து வந்த வீட்டில் கடந்த 23ஆம் திகதி உட்புகுந்த திருடன், ஒரு சங்கிலி, ஒரு சோடி காப்பு , இரண்டு மோதிரங்கள் என மொத்தம் 08 பவுண் நகைகளையும், ஒரு தொகை அமெரிக்க டொலர்களையும் பணத்தையும் திருடி சென்றுள்ளான்.
இது குறித்து வயோதிப பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து . பொலிசார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , ஒரு தொகை நகைகள் மீட்கப்பட்டன. அத்துடன் சந்தேக நபரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் , நகைகளை வாங்கிய மற்றைய நபரையும் பொலிஸார் கைது செய்து , குறித்த நபரிடம் இருந்தும் ஒரு தொகை நகைகளை மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , இருவரையும் சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.