No Fire Zone-ல் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் நினைவு கூரப்பட்டார்!
2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ‘நோ ஃபையர் ஸோன்’ பகுதிக்குள் சிறிலங்காவின் பீரங்கித் தாக்குதலால் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களின் நினைவேந்தல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலத்தில் இடம்பெற்றது.
‘புலிகளின் குரல்’ (Voice of Tigers) க்கு பங்களிக்கத் தொடங்கிய சத்தியமூர்த்தி, பின்னர் ‘ஈழநாதம்’ நாளிதழில் இராணுவக் கட்டுரை எழுதினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்காவின் பீரங்கி குண்டுகள் வீசப்பட்ட போது, ’நோ ஃபையர் ஸோன்’ பகுதிக்குள் இருந்து நேரடி சாட்சியமாக அறிக்கைகளை வழங்கி கொண்டிருந்தார்.
சத்தியமூர்த்தி “பத்திரிகைத் தரங்களைப் பேணுவதற்கும், போர்க்காலச் சூழ்நிலைகளின் துல்லியமான பிரதிநிதித்துவத்தை பேணுவதற்கும் பாடுபட்டார். அவரது பணி உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தியது, வெளிநாடுகளில் வாழும் ஏராளமான தமிழர்களை சென்றடைந்தது.
சத்தியமூர்த்தி உடனடியாக இறக்கவில்லை என்று பல தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. சரியான மருத்துவ கவனிப்பு இல்லாமையே அவரது மரணத்திற்கு காரணம் என உறவினர்கள் தெரிவித்ததாக ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இலங்கை அரசு 2009 ஜனவரி மற்றும் 2009 மே க்கு இடையில் மூன்று நோ பெயர் சூன் ப்குதிகளை அறிவித்தது, அதில் அவர்கள் 3 இலட்சத்திற்க்கும் அதிகமான தமிழர்களை அங்கு திரளுமாறு ஊக்குவித்தார்கள், அவர்கள் அங்கு பாதுகாப்பாக இருப்பார்கள் எனவும் கூறினர்.
சிறிலங்கா இராணுவத்தால் நோ ஃபையர் ஸோன் என அறிவிக்கப்பட்ட பகுதிகள் கடும் பீரங்கி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டன, மேலும் இந்த பகுதிகளுக்குள் நுழையும் மருந்துகள் மற்றும் உணவுகளை அரசு கடுமையாக கட்டுப்படுத்தியது.
2009 தமிழ் இனப்படுகொலையை எதிர்கொண்டு சர்வதேச சமூகத்தின் செயலற்ற தன்மையை கண்டித்து ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட முருகதாசன் வர்ணகுலசிங்கம் என்ற 26 வயது இளைஞரையும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி (TNPF) நினைவு கூர்ந்தது.