கறி பனிஸ் உள்ளே லைட்டர் பாகங்கள்! (வீடியோ)
பாணந்துறையில் ஒரு பிரபல ஹோட்டலில் கொள்வனவு செய்யப்பட்ட கறி பனிஸ் ஒன்றில் லைட்டரின் உலோகப் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
பாணந்துறை அருக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மஞ்சுள பெரேரா தனது மகன்களுக்கு கொடுப்பதற்காக இரு கறி பனிஸ்களை வாங்கியுள்ளார். அவற்றை சாப்பிட்டபோது, ஒரு பனிஸில் லைட்டரின் உலோகப் பாகம் காணப்பட்டது.
இதனை பற்றி மஞ்சுள பெரேரா பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்தார். ஆனால், அந்த பரிசோதகர் விடுமுறையில் இருப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் பாணந்துறை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு சென்றார். ஆனால், அங்கு அவரது முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பியதாக அவர் கூறினார்.
மேலும், இந்த ஹோட்டல் பாணந்துறை மாநகர சபைக்குட்பட்டது என்பதால், பிரச்சினையை மாநகர சபையுடன் இணைக்கப்பட்டுள்ள பொது சுகாதார பரிசோதகரிடம் தெரிவிக்குமாறும் அங்குள்ள அதிகாரிகள் அவரிடம் அறிவித்தனர்.