கிளிநொச்சி நகர் பகுதியில் வெளியேறும் மலக் கழிவு, அதிர்ச்சி காட்சிகள்!
கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து வெளியேறும் மலக்கழிவை 24 மணி நேரத்திற்குள் அகற்றாதால், சுகாதாரத்தை காப்பாற்ற முடியாமல் போய்விடும் என கரைச்சி சுகாதார வைத்திய அதிகாரி இ.கஜேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் கீழ் செயல்படும் கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் கடந்த ஒரு மாதமாக மலக்கழிவு வெளியேறி வருகிறது, ஆனால் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், இன்று கரைச்சி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் நிலைமையை நேரில் பார்வையிட்டு, நடவடிக்கைகள் எடுப்பதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.