யாழ் வல்லை விபத்தில் பிரபல தாவில் வித்துவானின் மகன் பலி
யாழ் வல்லைப் பகுதியில் நேற்று இரவு 7:30 மணியளவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர் யா/நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும், பிரபல தாவில் வித்துவான் வியஜகுமாரின் புதல்வனும் ஆவார்.
யாழ் நகர் பகுதியில் இருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர், வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானார். படுகாயமடைந்த இளைஞர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
சடலம் உடற்கூறு சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.