பெரிய நீலாவணையில் போதை மாத்திரைகளுடன் சலூன் ஊழியர் கைது
பெரியநீலாவணை பொலிஸார், கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விநியோகம் செய்த 29 வயது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், இன்று மதியம் அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவின் பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் உள்ள சிகை அலங்காரம் செய்யும் கடையில் சோதனை நடத்தப்பட்டது.
இதில், கடையில் 220 மில்லி கிராம் கேரளா கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கடையின் உரிமையாளர், 29 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக, சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் கல்முனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸார் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.