கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தில் வாழைச்சேனை காட்டுக்குள் சிக்கிய கசிப்பு உற்பத்தி

ஜனாதிபதியின் கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ், வாழைச்சேனை கிண்ணையடி காட்டு பிரதேசத்தில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுக்கும் வகையில், பாரிய கசிப்பு வேட்டை நடத்தப்பட்டது.
கிராமசேவகர் க. கிருஷ்ணகாந்தின் வழிகாட்டலில், பொலிசாரின் உதவியுடன், பிரதேச மில்லர் விளையாட்டு கழக இளைஞர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையில் பங்கேற்றனர். இந்த வேட்டையின் போது 100 லீற்றர் கசிப்பு, 30 லீற்றர் கோடா, 10 வெற்று வரல்கள் மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதன்போது சந்தேக நபர்கள் தப்பி ஓடியதாகவும், அவர்களை கைது செய்ய பொலிசாரின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிண்ணையடி பிரதேசத்தில் கடந்த காலமாக இத்தகைய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நடந்துவரியது, இது பிரதேச மக்களுக்குப் பல பிரச்சினைகளை உண்டாக்கியுள்ளது.
இதை முற்றாக ஒழிக்க, பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மில்லர் விளையாட்டு கழகத்தின் தலைவர் வ. வன்னியசேகரம் தெரிவித்தார்.