லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு
பண்டிகைக் காலத்திற்காக 34 ஆயிரம் மெற்றிக்தொன் சமையல் எரிவாயு ஓடர் செய்யப்பட்டுள்ளது.
அதன் ஒரு தொகுதி எதிர்வரும் வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாகவும், ஜனவரி வரை பல கப்பல்கள் நாட்டை வந்தடையும் எனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பலிலிருந்து இறக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் வழமைபோல சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சமையல் எரிவாயுவை சந்தைக்கு விநியோகிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை வரை எரிவாயுவினை சந்தைக்கு விநியோகிக்கும் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.