லொஹான் ரத்வத்தவின் செயலாளர் சடலமாக மீட்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் இன்று (20) கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் தகவலின்படி, அவரின் சடலத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்ததாகவும், சடலத்தின் அருகில் ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதற்கான விசாரணைகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபர், 49 வயதுடையவர் எனவும், கட்டுகஸ்தோட்டை வெரல்லகம பகுதியில் வசித்திருந்தார் என்றும், முன்னாள் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றியிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.