மருத்துவ பீட மாணவன் கொலை செய்யப்பட்டது ஏன்? காரணத்தை வெளியிட்ட சகோதரன்!
யாழ் பல்கலைகழக மருத்துவ பீடத்தில் 3ம் வருட மாணவனாக கல்வி கற்றுவந்த எனது சகோதரன் சிதம்பரநாதன் இளங்குன்றன் வைத்தியராக வந்துவிடுவார் எனும் ஒரே காரணத்திற்காக கொலை செய்யப்பட்டு தூக்கில் இடப்பட்டதாக இளங்குன்றனின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
இந்த கொலையினை பொலிஸார் மூடிமறைத்து தற்கொலைஎன காண்பிக்க முயல்கின்றனர். எனது சகோதரனுக்கு நீதி வேண்டி ஜனாதிபதி மாளிகை முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை இம்மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ளேன்.
இதற்கு ஆதரவாக யாழிலும் கவனயீர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டு எனது சகோதரனின் கொலைக்கு நீதியை பெற்றுத்தருமாறு அனைத்து முகநூல் நண்பர்களையும் கேட்டுக் கொள்கிறேன் என இளங்குன்றனின் சகோதரன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.