லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் இல்லை
2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்திலும் விலைகளில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போதைய விலை நிலவரம் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி,
- 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 3,690
- 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1,482
- 2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 694
என விற்பனை செய்யப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.