மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் இல்லை
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுக மீளவும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் மின்வெட்டு நேரத்தை குறைக்க முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுமான மின்வெட்டு நேர்ந்த்தில் எவ்விதமான மாற்றமும் இன்றி தொடருமென ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் அலகு ஒன்று சீர்செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தேசிய மின் இணைப்பில் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்றைய தினம் (01-10-2022) தெரிவித்திருந்தார்.