மாகாணக் கல்வி பணிப்பாளர் பதவிக்கு வடக்கில் எவரும் விண்ணப்பிக்கவில்லை

வடக்கு மாகாணக் கல்விப் பணிப் பாளர் பணிக்கு வடக்கில் இருந்து எவரும் விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு மாகாணக் கல்விப் பணிப் பாளர் பணிக்கு மத்திய கல்வி அமைச்சு இம் மாதம் 15 ஆம் திகதி விண்ணப்பம் கோரியுள்ளது.
இவ்வாறு கோரப்பட்ட விண்ணப்பத்தின் இறுதித் திகதி எதிர்வரும் 03ஆம் திகதி வரையே உள்ளபோதும் வடக்கில் இருந்து எந்தவொரு அதிகாரியும் இன்றுவரை விண்ணப்பிக்க வில்லை.
இவ்வாறு எவருமே வடக்கில் இருந்து விண்ணப்பிக்காத நிலையில் தெற்கில் இருந்து எவரேனும் விண்ணப்பிக்கும் சந்தர்ப்பத்தில் அங்கிருந்து ஒருவரே தேர்வாகும் சூழல் காணப்படுகின்றது.