வடக்கு மாற்று திறனாளிகளுக்கான இசைப்போட்டி யாழ்ப்பாணத்தில்

யாழ்ப்பாணத்தில் வடமாகாண மாற்று திறனாளிகளுக்கான இசைப்போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ளதாக புதியவாழ்வு இல்ல இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சமூகத்தின் மத்தியிலே ஒரு மாற்றுத்திறனாளி தன்னுடைய அன்றாட தேவைகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட அணுகு முறைகளை பெற்றுக்கொள்ளும் வசதிகள் இல்லாமலையே பல்வேறு சிரமங்களுடன் வாழ்த்து வருகின்றனர்.

எங்கள் நாடு வளர்ச்சி அடைந்து வரும் ஒரு நாடாக இருந்தாலும் சேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாக இருக்கின்றது.

சில அரச நிறுவனங்கள் அதனை நிவர்த்தி செய்து வந்தாலும் முழுமையாக எல்லாரையும் இந்த சேவைகள் சென்றடைவதில்லை.

அதனால் பல மாற்றுத்திறனாளிகள் அச்சத்தோடும், பல வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளிகளை மகிழ்வானர்களாக வைத்திருக்கும் களமாக புதிய வாழ்வு நிறுவனமும் சாவிகா சங்கீத அறிவாலயம் அமைப்பும் இணைந்து  வடக்கின் மாற்று திறனாளிகளுக்கான. இசைப்போட்டியை நடத்தவுள்ளது.

குறித்த போட்டியானது எதிர்வரும் 27 திகதி யாழ்ப்பாணம் மங்கயற்கரசி வித்தியாலயத்தில் முற்பகல் 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.