கொழும்பில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!
இன்று அதிகாலை கொழும்பில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பாதாள குழு உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர் உயிரிழந்துள்ளார்.
அங்கொட லொக்காவின் பிரதான உதவியாளரான 34 வயதுடைய மிலிந்த என்பவரே கொலை செய்யப்பட்ட முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் இன்று அதிகாலை 3 மணியளவில் வந்த நபர்கள் முல்லேரியா, தெல்கஹவத்தை பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு விகாரைக்கு அருகே உள்ள நபரின் வீட்டிற்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.