சீனாவில் இருந்து நாடு திரும்பினார் ஜானாதிபதி

சீனாவுக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று இரவு நாடு திரும்புகிறார்.

சீன விஜயத்தின் இறுதி நாளான இன்று காலை ஜனாதிபதிக்கும் சிச்சுவான் மாகாண சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வாங் சியாஹூயிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

அதன் பின், சீனாவின் சிச்சுவான், வெங்டூவில் உள்ள டெங்பேங் மின்சாரக் கூட்டுத்தாபனத்திற்கு (Dongfang Electric Corporation) ஜனாதிபதி விஜயம் செய்தார்.

ஜனாதிபதி, அடிமட்ட நிலையான அபிவிருத்தி மூலம் கிராமிய மறுமலர்ச்சியை நிரூபிக்கும் முன்மாதிரி கிராமமான சென் கி மாதிரி கிராமம் மற்றும் தேசிய விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் விவசாய நிலையத்திற்கும் விஜயம் செய்தார்.

இதில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.