ஜனாதிபதி சீனாவிற்கு பயணம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீனாவுக்கான விஜயம் எதிர்வரும் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
பிமல் ரத்நாயக்க, விஜித ஹேரத் ஆகிய அமைச்சர்களும் சீன விஜயத்தில் இணைந்து கொள்ள உள்ளதாக நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.