8 தமிழ் அமைப்புக்கள் உட்பட 15 அமைப்புக்களின் தடை நீடிப்பு

இலங்கை அரசு வெளியிட்டுள்ள விசேஷ வர்த்தமானி அறிவிப்பில், தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட 15 அமைப்புகள் மீதான தடை தொடரும் என அறிவித்துள்ளது. இந்த அமைப்புகள் பயங்கரவாத தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபட்டதோடு, அதற்கான நிதி ஆதரவை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் கையொப்பமிட்டுள்ள இந்த வர்த்தமானியில், இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவற்றின் நிதி மற்றும் பொருளாதார சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 222 தனிநபர்களுக்கும் தடை விதித்துள்ளது.
தொடர்ந்து தடை செய்யப்பட்ட அமைப்புக்கள்:
- தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)
- தமிழர் மறுவாழ்வு அமைப்பு (TRO)
- தமிழ் ஒருங்கிணைப்புக் குழு (TCC)
- உலகத் தமிழ் இயக்கம் (WTM)
- நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE)
- உலகத் தமிழர் நிவாரண நிதி (WTRF)
- தலைமையகக் குழு (HQ குழு)
- தேசிய தவ்ஹீத் ஜமாத் (NTJ)
- ஜமாஅதே மில்லத்தே இப்ராஹிம் (JMI)
- விலாயா அஸ் செய்லானி (WAS)
- கனடியத் தமிழர் தேசிய மன்றம் (NCCT)
- தமிழ் இளைஞர் அமைப்பு (TYO)
- தாருல் அத்தபவிய்யா
- இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM)
- சேவ்த பேர்ள்ஸ் (Save the Pearls)