வவுனியா பூந்தோட்டத்தில் 121 பேருக்கு புனர்வாழ்வு
போதை பாவனைக்கு அடிமையாகிய 121பேருக்கு வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
குறித்த 121பேரும் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் நீதிமன்ற உத்தரவின்பேரிலேயே இவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையும் தெரியவந்துள்ளது.
இவர்களில் ஐந்து பேர் கடந்த 15ம் திகதி இங்கிருந்து தப்பித்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.