வெளிநாட்டு காசுக்காக நாடகம் போடும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்?
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் காசுக்காகவும் நாடகம் போடுகிறார்கள் என தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களை நோக்கி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ வவுனியாவுக்கு இன்று வருகை தந்த போது மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தி போராட்டத்தை முன்னெடுத்த போது வவுனியா மாவட்ட செயலகத்தை நோக்கி முன்னேறாமல் பொலிஸார் தடுத்தனர்.
இச் சந்தர்ப்பத்தில் அங்கிருந்த உப பொலிஸ் பரிசோதகராக பணிபுரியும் தமிழர் ஒருவர், “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைப் பார்த்து “நீங்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்கும் காசுக்காகவும் நாடகம் போடுகின்றீர்கள்” என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், “நீ ஒரு தமிழனாக இருந்து இவ்வாறு தெரிவிப்பது தவறு. உங்களைப் போன்றோரே எமது இனத்தின் துரோகிகள். இராணுவ அறிவித்தலுக்கு இணங்கி பிள்ளைகளையும் கணவனையும் நம்பி ஒப்படைத்து இன்று பறிகொடுத்த எமக்குத்தான் அதன் வலி தெரியும்” என குறித்த உப பொலிஸ் பரிசோதகரை நோக்கி கூறியுள்ளனர்.