ரிஷாத்தை தேடி வந்து சந்தித்த மகநாயக தேரர்!

ஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலில் தொடர்புபட்டவர் எனும் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ரிஷாத் பதியூதீன் 174 நாட்களின் பின் கடந்த 14ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் ரிஷாட் பதியூதீனை (Rishad Bathiudeen) பெளத்த தேரர்கள் உட்பட பெருமளவான மக்கள் ஆனந்த கண்ணீருடன் வரவேற்றுள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பின் புத்தளத்திற்கு ரிஷாட் பதியூதீன் (Rishad Bathiudeen)  விஜயம் செய்தார்.

இதன்போது அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் ஆனந்த கண்ணீரோடு வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இதன் போது ரிஷாட் பதியுதீனின் புத்தளத்தில் உள்ள இல்லத்திற்கு வருகை தந்த குருநாகல் மகநாயக தேரர் அவரிடம் நலன் விசாரித்ததோடு  அவருக்கு ஆசியும் வழங்கி சென்றுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.