மாதத்திற்கு ஒரு முறை எரிபொருள் விலையில் மாற்றம்
மாதத்திற்கு ஒருமுறை எரிபொருள் விலைஇல் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும், இது குறித்த பிரேரணையை எதிர்வரும் 21ம்திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
விலை சூத்திரத்தை கடந்த 15ம் திகதி கூறியிருந்தோம். இதனை அடுத்து பொருளாதார இழப்பை சமாளிக்க 14ம் திகதி அல்லது 13ம் திகதி வரை பதிவுகளை மேற்கொள்ளாமல் இருந்தீர்கள். அதனால் தற்போது மாதந்தோறும் அதனை மேற்கொள்ள தீர்மானம் எடுத்துள்ளோம்.
இது குறித்த பிரேரணை வரும் திங்கட்கிழமை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு பின்னரோ அல்லது சில மணி நேரங்களுக்கு முன்னரோ எரிபொருள் விலை அதிகரித்ததா அல்லது குறைந்ததா என அறிவிக்கப்படும்.
எதிர்வரும் மாதத்தில் இருந்து இப் புதிய முறைமை நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளோம் என தெரிவித்தார்.