யாழ்ப்பாணத்தில் சுமந்திரனுக்கு எதிராக போராட்டம்!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அத்தோடு கறுப்புகொடி கட்டி குருநகர் பகுதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உள்ளூர் இழுவை மடி தொழில் தடை செய்யப்பட வேண்டும் என  சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து இந்த  போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.