ஞாயிறு ஶ்ரீலங்கா சுதந்திர தினம்! எனவே திங்கள் பொது விடுமுறையா?
திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படமாட்டாது என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இன்று தெரிவித்துள்ளார்.
76ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டாலும் அதற்கு மறுநாள் பொது விடுமுறை அல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திங்கட்கிழமை அனைத்து அரச நிறுவனங்களும் வழமை போன்று இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற போதிலும் இங்கே, தமது அரசியல் பதிவிகளுக்காக இனவாதம் பிடித்த சிலரிடம் நாடு சிக்குண்டுள்ளமை வெளிப்படையானது.
இலங்கை பிரித்தானியர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றதற்கு பதிலாக, சுதந்திரம் பெறாமல் இருந்திருந்தால் இன்று இலங்கை மக்கள் அனைவரும் பிரித்தானிய குடிமக்கள் போல இருந்திருப்பார்கள் எனும் சிந்தனை பலரிடம் உள்ளதையும் காணமுடிகிறது.