தமிழக யாழ்ப்பாண இணைப்பு சிவகங்கை கப்பல் சேவை மீள ஆரம்பம்

நாகை துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் புறப்பட்ட சிவகங்கை கப்பல், இன்று (சனிக்கிழமை, 22) மதியம் 12.15 மணியளவில் இலங்கை காங்கேசன்துறையை வந்தடைந்தது.

இந்தியா – இலங்கை இடையிலான கலாச்சார மற்றும் சுற்றுலா தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கில் 2003 அக்டோபர் மாதம், நாகையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பன்னாட்டு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இச்சேவை சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், புயல், மழை, கடல் சீற்றம், சீதோஷ்ண நிலை போன்ற பிரச்சினைகளால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சிவகங்கை கப்பல் போக்குவரத்துக்கு தயாராகியுள்ளதை அடுத்து, இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அதை இயக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.

மூன்று மாதங்களுக்குப் பின் இந்த சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால், இருநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், இந்த கப்பல் இன்று மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணிக்கவுள்ளது. இந்த சேவை செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய அனைத்து நாட்களிலும் இடம்பெறும் என கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button

ஹாய்! Ad Blocker யூஸ் பண்றீங்களா?

தொடர்ந்து செய்திகளை படிக்க Ad Blocker-ல் LBC Tamil வலைதளத்தை exclude செய்யுங்கள்.