யாழில் செப்பு கம்பி எடுக்க அறுக்கப்பட்ட தொலைபேசி இணைப்புக்கள்
நெல்லியடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொலைபேசி இணைப்பு வயர்களை அறுத்து செப்பு கம்பிகளை திருடுவதற்கான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாக, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன.
கடந்த சில தினங்களில், நெல்லியடி பொலிஸ் பிரிவில் இதுபோன்ற 8 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
அறுக்கப்பட்ட தொலைபேசி வயர்களின் பெறுமதி சுமார் 12 இலட்ச ரூபாய்க்கு மேல் என மதிப்பிடப்படுகிறது.
இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெறும் திருட்டு சம்பவங்களால், தொலைபேசி சேவை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.