ஊழல் செய்து உழைத்த சொத்துக்கள் அரசு உடமையாக்கப்படும்!
ஊழல் மோசடிகளின் ஊடாக உழைக்கப்படும் சொத்துக்கள் அரசு உடமையாக்கப்படுமென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி ஊடாக திரட்டப்பட்ட சொத்துக்கள் அரசு உடமையாக்கப்பட்டது போல, ஊழல் மோசடிகளின் ஊடாக உழைக்கப்பட்ட சொத்துக்களென நிரூபிக்கப்படுமாக இருந்தால் அரசு உடமையாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஊழல் மோசடிகள் குறித்து தகவல்கள் கிடைத்தால் அவற்றை வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதிலும் உணவுப் பொருள் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் உணவுத் தட்டுப்பாட்டை தவிர்க்க முடியுமெனவும் அவர் இதன் போது குறிப்பிட்டார்.