மனைவியின் 15 வருட கள்ள காதலனை கழுத்தறுத்து கொலை செய்த கணவன் கைது!
பொரலஸ்கமுவ பிரதேசத்தில் 15 வருட கள்ள காதலனை கழுத்தறுத்து கொலை செய்த சம்பவத்தோடு தொடர்புடைய 49 வயதுடைய கணவன் பாணந்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மனைவிக்கும் கொலை செய்யப்பட்ட நபருக்குமிடையே 15 வருடங்களாக தொடர்பு இருந்து வந்ததாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அவர் தனது கள்ளக்காதலனுடன் இருப்பார் எனும் சந்தேகத்தில் இந்த கொலையினை செய்ததாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமக்கு 24 மற்றும் 17 வயதுகளில் இரு மகள்கள் இருப்பதாகவும், அவர்கள் சமூகத்தில் எதிர்நோக்கும் அவமானத்தினை பொறுத்து கொள்ள முடியாமையினால் இந்த குற்றத்தை திட்டமிட்டதாக சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், பெல்லந்தரை சந்தி பகுதியில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் முச்சக்கர வண்டியை பின்தொடர்ந்து சென்று பொரலஸ்கமுவ, தேவலமுல்ல பிரதேசத்தில் வைத்து மன்னா கத்தியால் அவரின் கழுத்தில் தாக்கி கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கொலையை செய்துவிட்டு தப்பிச் செல்லும் போது தனது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக சந்தேநபர் தெரிவித்துள்ளதுடன், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய மன்னா கத்தி பிரிவென வீதியில் உள்ள வடிகாலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே கடந்த 2ஆம் திகதி இரவு இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.