சாந்தன் ஏன் சந்தனமானார்?
![](https://lbctamil.com/wp-content/uploads/2024/04/WWW.LBCTAMIL.COM-NEWS-19.jpg)
“சாந்தன் ஏன் சந்தனமானார் ?” எனும் தலைப்புடன் நிகழ்வு வணக்க நிகழ்வு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு 33 வருடங்கள் சிறைவாசத்தின் பின் விடுவிக்கப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் ஒன்றரை ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் சாந்தன் உடல்நலக்குறைவினால் உயிரிழந்திருந்தார்.
சாந்தனின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் மதகுருமார்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.