இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் இலங்கை ஜனாதிபதி
(LBC Tamil) இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.
இது தொடர்பான புகைப்படத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது ட்வீட்டரில் பகிர்ந்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது அவரை சந்திப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும் இந்தியாவின் அண்டை நாடுகளின் பிணைப்புகளை வலுப்படுத்துவதுடன், அண்டை நாடுகளுக்கு முதலிடம் கொள்கையை இந்தியா முன்னெடுத்து செல்லும் எனவும் அந்த ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
Honoured to call on President Ranil Wickremesinghe of Sri Lanka during his India visit.
Confident that his meeting with PM @narendramodi tomorrow will further strengthen our neighborly bonds and take forward India’s Neighbourhood First and SAGAR policies.@RW_UNP pic.twitter.com/BiHsgVbhqG
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) July 20, 2023