கொழும்பு விபத்தில் இரு தமிழ் இளைஞர்கள் பலி

(LBC Tamil) கொழும்பு – கொலன்னாவை பிரதான வீதியில் இன்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தமிழ் இளைஞர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
பாரவூர்தி ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
வத்தளையைச் சேர்ந்த அன்ரனி மரியநாயகம் (26 வயது), தேவதாஸ் கனிஸ்ரன் (22 வயது) ஆகியோரே உயிரிழந்தனர்.

பாரவூர்தியின் சாரதி பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.



